வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தாராபிஷேகம்
ADDED :619 days ago
வேலூர் ; அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், மூலவருக்கு (ஜலகண்டேஸ்வரர்) தாராபிஷேகம் நடந்தது. (தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.) இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அக்னி நட்சத்திரம் காலத்தில், சிறு துளையுள்ள வெள்ளி பாத்திரத்தில், பன்னீர் நிரப்பி, அதில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் வாசனை திரவியங்கள் இடப்பட்ட பாத்திரம் இறைவன் சிரசில் சொட்டு, சொட்டாக விழும்படி பொறுத்தப்பட்டது. உச்சிகால அபிஷேகம் காலை, 11.30 மணிக்கு முடிந்த பின், தாரா அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணி வரை நடக்கும். வரும் 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினசரி தாரா அபிஷேகம் நடக்கும்.