/
கோயில்கள் செய்திகள் / அயோத்தியில் சாதாரண பக்தராக தாண்டவத் பிராணம் செய்து வழிபட்டார் பிரதமர் மோடி; அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்
அயோத்தியில் சாதாரண பக்தராக தாண்டவத் பிராணம் செய்து வழிபட்டார் பிரதமர் மோடி; அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்
ADDED :630 days ago
அயோத்தி: உ.பி., மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ராமர் கோவிலில் பிரார்த்தனை நடத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ரோடு ஷோவிலும் பங்கேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ( மே.,05-ம் தேதி) அயோத்திக்கு வருகை தந்தார். அங்கு அவர் ராமர் கோவிலில் பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அயோத்தி நகரில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்றார்.
பிரதமர் மோடியின் அயோத்தி வருகை குறித்து, ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், "பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கு பொது பக்தராக சென்று பிரார்த்தனை செய்தார். கோவிலில் தாண்டவத் பிராணம் செய்து, ஆரத்தியும் செய்தார். இதற்குப் பிறகு, பிரதமர் மோடி ஒரு ரோட்ஷோவில் பங்கேற்றார், அங்கு அவருக்கு ஆதரவாக ஒரு பெரிய கூட்டம் இருந்தது என்று தெரிவித்தார்.