தங்கம் கொட்டும் விமானம்
ADDED :548 days ago
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை வெளியேற்றிய ராவணன் இலங்கையின் மன்னன் ஆனான். குபேரனிடம் புஷ்பக விமானம் இருந்தது. அது செல்லும் இடமெல்லாம் தங்கத்தையும், நவமணியையும் கீழே கொட்டிக் கொண்டே செல்லும். அந்த விமானத்தை ராவணன் பறித்துக் கொண்டான். குபேரனின் புஷ்பக விமானத்தில் தான், சீதையை இலங்கைக்கு கடத்தியதாக ராமாயணம் கூறுகிறது.