உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் விடையாற்றி உற்சவம் நிறைவு

சென்னை, திருவல்லிக்கேணியில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். பிரம்மோற்சம் ஏப்.,23ல் துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மே 3ம் தேதி முதல் விடையாற்றி உற்சவம் நடைபெற்று வருகிறது. இன்று புஷ்பபல்லக்கு புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. விழாவில் மாலை 5.30 மணிக்கு பத்தி உலாத்தல் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !