உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருவாலங்காடு மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை; திருவாலங்காடு மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாலங்காடு கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இ கோவிலில் அம்பிகையை வழிபட்டால் நோயற்ற, நிறைவான, சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு தீமிதி  திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல் நடைபெற்றது தொடர்ந்து சுவாமி விதி உலா நடந்தது நேற்று மாலை காவிரி ஆற்றங்கரையில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் சக்தி கரகம், பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்தனர். சிறப்பு அலங்காரத்துடன் மகா மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் வாயிலில் எழுந்தருள திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் கரகம், பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து வந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் தீமிதி திருவிழாவை தொடர்ந்து மாரியம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !