உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ஜகத்குரு ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள பிரம்மா கோயில் தேவஸ்தான வளாகத்தில் உள்ள  ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கராச்சாரியாரின் திருவுருவப்படம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீப தூபம் சமர்பித்து பிரசாதங்கள்  வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் தலைமை குருக்கள் கருணாகர குருக்கள் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு  கோயிலின் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் , கோயில் உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத் கண்காணிப்பாளர் நாகபூஷணம் யாதவ், கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !