உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யாகசாலை பூஜை

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யாகசாலை பூஜை

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்தை முன்னிட்டு அஸ்திர தேவருக்கு யாக பூஜைகள் நடந்தன. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று இரவு 6:30 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை சிவாச்சார்யர்களால் நடந்து, அம்மன் சன்னதியில் வில்வ மரத்திற்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து அஸ்திர தேவர், விநாயகர், கொடிப்படம் புறப்பாடாகி திருவீதி வலம் வந்ததது. நாளை காலை 6:00 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் கொடியேற்றம் நடந்து விழா துவங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !