ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜர் ஜெயந்தி
ADDED :553 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராமானுஜரின் திருநட்சத்திர ஜெயந்தி விழா நடந்தது. சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் அவதரித்த நாளாகும். இதனை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்ட ராமானுஜர், தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு திருமஞ்சனமும், திருமுக்குளத்தில் தீர்த்தவாரியும் நடந்தது. பின்னர் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ராமானுஜரை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஆண்டாள், வடபத்ர சயனர், பெரியாழ்வார் சன்னதிகளில் ராமானுஜர் எழுந்தருளி மங்களாசாசனம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.