திருப்பரங்குன்றம் பத்ரகாளியம்மன் கோயிலில் 32ம் ஆண்டு உற்ஸவ விழா
ADDED :552 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயிலில் 32ம் ஆண்டு உற்ஸவ விழா மே 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் அம்மனுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்தனர். நேற்று பக்தர்கள் முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மே 21 இரவு மறுபூஜை நடக்கிறது. நிர்வாகிகள் வேட்டையார், அருணாச்சலம், காசிராஜன், சுடலைமணி விழா ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.