பழநிக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள்
ADDED :882 days ago
பழநி: வைகாசி விசாக விழாவை யொட்டி பழநி முருகன் கோயிலுக்கு கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பறவை காவடி, தீர்த்த காவடி உள்ளிட்ட காவடிகளை நேர்த்திக்கடனாக எடுத்து வருகின்றனர்.தற்போது வைகாசி விசாக விழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி, தீர்த்த காவடி எடுத்து வருகின்றனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அடிவாரம் கிரி வீதியில் அலகு குத்தி வலம் வந்தனர். ஆக்கிரமிப்பு இல்லாததால் எளிதில் கிரிவலம் வந்தனர். நேர்த்திக்கடன் நிறைவு செய்த பின் முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.