உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக விழா 8ம் திருநாளை முன்னிட்டு நேற்று நடராஜர் புறப்பாடு நடந்தது.

இக்கோயிலில் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு தினசரி இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு உற்ஸவ நடராஜர் அலங்காரத்தில் நடராஜர் சன்னதியில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு  கேடகத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ஐம்பெரும் கடவுளர்க்கு  மண்டகப்படி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் கோயிலிலிருந்து புறப்பாடாகி தேரோடும் வீதிகளில் வலம் வந்தார். ஆண்டில் ஒரு முறை மட்டுமே நடராஜர் திருவீதி புறப்பாடு நடைபெறும். இரவில் குதிரை வாகனத்தில் சுவாமி , அம்பாள் திருவீதி வலம் வந்தனர். இன்று காலை 6:00 மணிக்கு ஐம்பெரும் கடவுளர் மூன்று தேர்களில் எழுந்தருளி, மாலை 4:35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை தெப்பத் திருவிழாவை முன்னிட்டு யோகபைரவர் சன்னதி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சீதளிக்குளத்தில் போதிய நீர் இல்லாததால் மாலையில் சுவாமி,அம்பாள் தெப்பக்குள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தல் மட்டும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !