காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஸ்கந்தகிரி பிரசாதம் வைத்து வழிபாடு
ADDED :499 days ago
காஞ்சிபுரம்; சோமவார பிரதோஷத்தையொட்டி, செகந்திராபாத், ஸ்கந்தகிரியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து, காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு விபூதி உள்ளிட்ட பிரசாதம் அனுப்பப்பட்டது. காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்கந்தகிரி கோவிலில் இருந்து அனுப்பப்பட்ட பிரசாதம் மற்றும் பல்வேறு மலர்களை காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில், சமர்பித்து வழிபாடுசெய்தார். அதை தொடர்ந்து, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, பிரசாதம் வழங்கினார். இதில், தமிழகம் மட்டுமின்றி வெ ளிமாநிலங்களிலும் வந்திருந்த திரளான பக்தர்கள் சுவாமிகளிடம் ஆசிபெற்றனர்.