உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

கடலூர்; கடலூர் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.

கடலூர் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா கடந்து 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகிழ்ச்சியான தேரோட்டம் இன்று ( 22ம் தேதி) நடைபெற்றது. முன்னதாக காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேர் மாட வீதிகளில் வலம் வந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !