வைகாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ADDED :863 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பெய்த லேசான மழையில் குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வைகாசி பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ராஜகோபுரத்தை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் செல்ல துவங்கினர். பெய்த லேசான மழையில் குடை பிடித்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே, அமைக்கப்பட்ட பந்தலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள், ரயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.