மேலும் செய்திகள்
ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
473 days ago
அன்னூர் பெரிய அம்மன் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
473 days ago
அழகு வள்ளியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் துவக்கம்
473 days ago
சிவனின் அவதாரங்களில் அர்த்தநாரீஸ்வரர் அவதாரம் தனி சிறப்புடையதாகும். ஆணும் பெண்ணும் சமம் எனும் தத்துவத்தையும், சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை என்பதை விளக்கும் உருவமாகவும் திகழ்கிறது இந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவம். சிவனின் அர்த்தநாரீஸ்வர வடிவத்தை வணங்கினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். பவுர்ணமி நாளில் சந்திரன், பூரணக் கலைகளுடன் அருள்கிறார். வழிபாட்டுக்குரிய மிக சிறந்த நாள் பவுர்ணமி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் நேர்பார்வையில் வீற்றிருப்பர். கிரிவலம் வந்து வழிபடுவதால் ஆத்மபலமும், மனோபலமும் கிடைக்கும். இன்று குடும்ப ஒற்றுமை மற்றும் சர்வ மங்களங்களும் உண்டாக்கும் அர்த்தநாரீஸ்வரர் விரதம் . திருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அதுபோல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே அன்னையாக விளங்குபவள். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும், நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமானவராவர். இன்று சிவ சக்தியை வழிபட நல்லதே நடக்கும்.
473 days ago
473 days ago
473 days ago