உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: ஆஞ்சநேயர் கோவில் செல்ல தடை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி – ஆழியாறு வழித்தடத்தில், பிரசித்திபெற்ற பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, அதிகப்படியான பக்தர்கள் வருகை புரிந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருமூர்த்தி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் தரைமட்ட பாலம் தண்ணீர் மூழ்கியுள்ளது. இதனால், பக்தர்கள் நலன் கருதி, ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்தள்ளது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து, வழக்கம்போல பாலத்துக்கு கீழே தண்ணீர் வழிந்தோடினால் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !