உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவிலில் நேற்று மதியம் விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு மகா தீபாராதனை நடந்து, ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !