இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :584 days ago
கோவை; கோவை, இடிகரை பகுதியில் உள்ள வேதநாயகி உடனமர் வில்லீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது இதில் வெள்ளி காப்பு கவசத்தில் சர்வ அலங்காரத்துடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.