உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி வழிபாடு; கோவையின் திருவண்ணாமலை.. மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பவுர்ணமி வழிபாடு; கோவையின் திருவண்ணாமலை.. மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

கோயம்புத்தூர்;  வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு கோயம்புத்தூர் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

வைகாசி விசாகம் மற்றும் இன்று பவுர்ணமியை முன்னிட்டு. கோவையின் திருவண்ணாமலையாக போற்றப்படும் மதுக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இங்கு காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். மலையில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபட்டனர். மலை உச்சிக்கு செல்லும் படிகள் மற்றும் யாத்திரை பாதையை சுற்றி தண்ணீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.  கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !