உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்யாறு பெருமாள் கோயில்களில் ஒரே இடத்தில் 6 கருட சேவை

செய்யாறு பெருமாள் கோயில்களில் ஒரே இடத்தில் 6 கருட சேவை

செய்யாறு; செய்யாறு அருகே, 6 கோவிலின் பெருமாள் ஒன்றாக கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில், செய்யாற்றங்கரையில்,  ஆண்டுதோறும் வைகாசி விசாகத்தன்று, அப்பகுதியை சுற்றியுள்ள, 15 கிராமங்களை சேர்ந்த பெருமாள் கோவிலின் சுவாமிகள், ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்,  கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டு வைகாசி விசாக கருட சேவை உற்சவம் நேற்று  முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை நடந்தது. இதில், கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள், இளநீர்குன்றம் ஸ்ரீவைகுண்ட சீனிவாச பெருமாள், சேத்துப்பட்டு ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், இளநகர் சீனிவாச பெருமாள்,  தேத்துறை சீனிவாச பெருமாள், பெண்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய, 6 கிராமங்களில் இருந்து, பெருமாள் சுவாமிகள், கூழமந்தல்  செய்யாற்றங்கரையில், கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோடை மழையால் மற்ற, 9 கிராமங்களிலிருந்து  பெருமாள்  சுவாமிகள், இந்தாண்டு கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !