ஐயப்பன் பூஜா சங்கத்தில் மகா பெரியவரின் 131 வது ஜெயந்தி விழா
ADDED :535 days ago
கோவை; ராம் நகர், ஐயப்பன் பூஜா சங்கத்தில் காஞ்சி மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது
காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கோவை, ராம் நகர் சத்யமூர்த்தி சாலை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, விழாவில் வேத விற்பன்னர்களால் வேதபாராயணம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவர் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.