பழநி வைகாசி விசாக உற்ஸவ சாந்தி ஹோமம் ; வெள்ளிக் கலசம் வைத்து வழிபாடு
ADDED :812 days ago
பழநி; பழநி வைகாசி விசாக உற்ஸவத்தை முன்னிட்டு உற்ஸவ சாந்தி விழா பழநி மலைக்கோயில் கைலாச நாதர் சன்னதியில் நடைபெற்றது. பழநி வைகாசி விசாக உற்ஸவம் சமீபத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் உள்ள கைலாசநாதர் சந்நிதியில் வெள்ளிக் கலசம் வைத்து சாந்தி ஹோமம் செய்தனர். உச்சிகால பூஜையில் பழநி முருகன் சன்னதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர், செல்வகுமார், நவீன் விஷ்ணு, நரேஷ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செல்வசுப்பிரமணியம் குருக்கள் யாக பூஜை செய்தார். மாலையில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் உற்ஸவ சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.