உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நெல்லிக்குப்பம் திரவுபதி அம்மன் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மே மாதம் 3ம் தேதி கொடியேற்றம் நடந்தது. கடந்த 30ம் தேதி முதல் தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. இரவு பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்துவருகிறது. தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது. நேற்று அர்ஜூனன்திரவுபதி திருகல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் திருமண கோலத்தில் அருள்பாலித்தனர். பூஜைகளை கணேஷ் பூசாரி செய்தார். பக்தர்களுக்கு கல்யாண விருந்து வைத்தனர். வரும் 7ம் தேதி மாலை தீமிதி திருவிழாவும், 9ம் தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !