உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயில் முன்பு டூவீலர்கள் ஆக்கிரமிப்பு : பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் கோயில் முன்பு டூவீலர்கள் ஆக்கிரமிப்பு : பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் மேலவாசல் முருகன் சன்னதி முன்பு டூவீலர்கள் ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரம்ப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேற்குவாசல் நுழைவில் முருகன் சன்னதி உள்ளது. இச்சன்னதி முன் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கடைகாரர்கள், கோயிலுக்குள் சுவாமி கும்பிட சொல்பவர்கள் டூவீலர்களை முருகன் சன்னதி முன்பு நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து பக்தர்கள் முறையிட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் முருகன் சன்னதி முன் டூவீலர்கள் ஆக்கிரமிப்பு பகுதியாக மாறிவிட்டது. இதனால் போக்குவரத்து இடையூறாகவும், சுவாமி தரிசனம் செய்தவர்களுக்கு சிரமமும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார் டூவீலர்களுக்கு அபதாரம் விதித்து, அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !