ஸ்ரீனிவாஸப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :529 days ago
மதுரை ; திருநகர் சீனிவாசாநகர் ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீனிவாஸப் பெருமாள் கோயிலில் 36ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. காலையில் யாகசாலை பூஜை பூர்த்தி செய்து, மூலவர்கள், உற்சவர்கள், பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. உற்ஸவர்கள் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீநிவாஸப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.