உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாலையம்மன் கோவில் திருவிழா

நத்தம் மாலையம்மன் கோவில் திருவிழா

நத்தம், நத்தம் அருகே பட்டிகுளம் மாலையம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கடந்த மே.28 தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.இதில் சுற்று வட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பட்டிகுளம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !