ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் பரவசம்!
ADDED :4781 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் துவங்கி நடந்து வருகிறது. இதைக்காண தினமும் பக்தர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தினமும் ரெங்கநாதர் உபய நாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள்வார். அலங்காரம் கண்டருளி ஊஞ்சல் உற்சவம் கண்டருள்வார்.இந்த ஆண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த, இரண்டாம் தேதி துவங்கி நடந்து வருகின்றது. ரெங்கநாதரின் அலங்காரத்தையும் ஊஞ்சல் உற்சவத்தையும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்து வருகின்றனர். ஊஞ்சல் உற்சவம் வரும், 10ம் தேதி வரை நடக்கிறது.