திருவெற்றியூர் தியாகராஜர் கோயிலில் திருநடனங்களுடன் வசந்த உற்சவம் நிறைவு
ADDED :583 days ago
சென்னை; திருவெற்றியூர் தியாகராஜர் கோயிலில் வைகாசக வசந்த உற்சவம் கடந்து 23ம் தேதி துவங்கியது. இந்த உற்சவத்தில் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் சுவாமி தினமும் எழுந்தருளி உலா வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவின் நிறைவு நாளில் தாயாருடன் தியாகராஜ சுவாமி அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் எழுந்தருளினார். சிவனடி பாத தாங்கிகள் சுவாமியை தோளில் தூக்கி வர, வடிவுடையம்மன் சன்னிதி முன் மலர்களை தூவி, ஆரூரா.. தியாகேசா கோஷத்துடன் திருநடனம் புரிந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனர்