உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிச்சிக்கோவில் ஆண்ட பிள்ளை நாயனார் கோயில் கும்பாபிஷேகம்

பெரிச்சிக்கோவில் ஆண்ட பிள்ளை நாயனார் கோயில் கும்பாபிஷேகம்

திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்டபிள்ளை  நாயனார் சமீபவல்லி அம்பாள் கோயிலுக்கு நடந்த கும்பாபிே ஷகத்தில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

பசிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் கி.பி.13 ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய மன்னரால் எழுப்பப்பெற்றது.  இறைவனாக சுகந்தவனேஸ்வரர், இறைவியாக சமீபவல்லி அம்பாள் எழுந்தருளியுள்ளனர். பரிவார தெய்வங்களில் வயிரவசுவாமி,  ஒற்றைச் சனீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தரால் வழிபட்ட  தலம் ஆகும். இக்கோயிலின் அனைத்து சன்னதிகளும்,கோபுர,விமானங்களும் திருப்பணி நடந்து நேற்று கும்பாபிேஷகம் நடந்தது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு ஜூன் 7 ல்  யாகசாலை பூஜைகள் சாமிநாத குருக்கள்,தண்டாயுதபாணி குருக்கள், மகாதேவக்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் துவங்கியது. 23 குண்டங்கள் அமைத்து முதல் நாள் முதலாம் காலயாகபூஜையும், இரண்டாம் நாளில் 2,3 ம் காலயாக பூஜைகளும் நடந்தன. யாக சாலை பூஜையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பங்கேற்றார்.

காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜை துவங்கியது. தொடர்ந்து கோ பூஜை,லட்சுமி பூஜை நடந்தது. பின்னர் பூர்ணாகுதி தீபாராதனைக்குப் பின் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து கோபுர,விமானங்களுக்கு சென்றது. பின்னர் விமான,கோபுர கலசங்களுக்கு பூஜைகள் நடந்து சிவாச்சார்யர்களால்  புனித நீரால் காலை 9:35  மணிக்கு கும்பாபிேஷகம் நடந்தது. சுற்று வட்டாரக்கிராமத்தினர் திரளாக கும்பாபிேஷகத்தை தரிசித்தனர். பின்னர் சுவாமிகளுக்கு மகா அபுிேஷகம் நடந்தது. இரவில் உற்ஸவர் சுவாமி திருவீதி வலம் வந்தனர். ஏற்பாட்டினை தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, கண்காணிப்பாளர் டி. ரவிச்சந்திரன், திருப்பணி உபயதாரர்கள் அழ.கருப்பையா, .டாக்டர் சேது குமணன், எஸ்.பி.எம்.ஆறுமுகம், அழ.கரு.மணிகண்டன், சி.வைரமணி,எஸ்.கோட்டைச்சாமி மற்றும் பெரிச்சிக்கோயில் கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !