உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை விழா

குட்டூர் அண்ணாமலையார் கோவிலில் மண்டல பூஜை விழா

நத்தம், நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 48-ம் நாள் மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவில் முன்பாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசன பூஜைகளும்,108 சங்காபிஷேகம், முதல் கால மற்றும் இரண்டாம் யாகசாலை பூஜைகளும் நடந்தது. பின்னர் நேற்று காலையில் மஹா பூர்ணாகுதி பூஜையை தொடர்ந்து மூலவருக்கு பால், பழம்,சந்தனம், விபூதி, இளநீர், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பிரசாதமும், அன்னதானமும் வழங்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஒய்வுபெற்ற கனிமவளத்துறை இணை இயக்குநரும், கோவில் தலைமை நிர்வாகியுமான மணிமாறன் மற்றும் குட்டூர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !