உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் அகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

காரைக்கால் அகத்தீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

காரைக்கால், காரைக்காலில் ஞானாம்பிகை சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வரிச்சிக்குடி மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில் திருப்பணி வேலைகள் முழு வீச்சில் முடிக்கப்பட்டு கடந்த 5ம் தேதி கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து 7ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இன்று 6ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் ஓத,மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.தொடர்ந்து ஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி, ஸ்ரீஞானாம்பிகை அம்மன் உள்ளிட்ட மூலவர்களுக்கு மகாபிஷேகமும்,மகாதீபாராதனையும் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் திருமுருகன்,எம்.எல்.ஏ., சந்திர பிரியங்கா,முன்னாள் எம்.எல்.ஏ.,ஒமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !