காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஆண்டு விழா
ADDED :646 days ago
சூலூர்; காங்கயம் பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவில் ஆண்டு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சூலூர் அடுத்த காங்கயம்பாளையத்தில் உள்ள ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 43 வது பிரதிஷ்டை தின விழா எனும் ஆண்டு விழா இன்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து,8:00 மணிக்கு, கலச பூஜை நடந்தது. 10:00 மணிக்கு, ஸ்ரீ ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் மற்றும் உச்ச பூஜை நடந்தது. மாலை, பகவதி சேவை, அத்தாழ பூஜை முடிந்தபின், ஹரிவராசனம் பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.