உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு!

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு!

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் அறங்காவலர் சபாபதி, தொழிலதிபர் கதிரேசன் முன்னிலை வகித்தார். அண்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் 20 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் காணிக்கையாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 31 ரூபாய் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !