உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம்

சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம்

சிவகாசி; சிவகாசி காசி விஸ்வநாதர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. சிவகாசி காசி விஸ்வநாதர் கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 6 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் தினசரி அம்மன், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவர். நேற்று இரவு 12:00 மணிக்கு விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருக்கல்யாணம் விருந்து அளிக்கப்பட்டது. நாளை காலை 8:45 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !