உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி கைலாசநாதருக்கு தீர்த்தவாரி; பக்தர்கள் பரவசம்

திருநெல்வேலி கைலாசநாதருக்கு தீர்த்தவாரி; பக்தர்கள் பரவசம்

திருநெல்வேலி; திருநெல்வேலி ஜங்ஷன் சவுந்தரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதருக்கு தீர்த்தவாரி இன்று தாமிரபரணி தைப்பூச மண்டப படித்துறையில் நடந்தது.

நெல்லை ஜங்ஷன் கைலாசநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பழமை வாய்ந்த இக்கோயில் முத்துசுவாமி தீட்சதரால் பாடல் பெற்ற ஸ்தலம். இக்கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தினமும் சுவாமி வலம் வந்து அருள்பாலித்து வந்தார். விழாவில் நேற்று 13ம் தேதி சுவாமி, அம்பாள் சிறப்பு அபிஷேகம், திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நர்மதா தேவி, தக்கார் சாந்திதேவி மற்றும் அர்ச்சகர்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !