சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :663 days ago
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜூன் 10ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 17 நாட்கள் இவ்விழா நடக்கிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். நேற்று பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பூப்பல்லக்கு நடந்தது. இன்று (ஜூன் 19) பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.