உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்க்கண்டேயர் வழிபட்ட சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

மார்க்கண்டேயர் வழிபட்ட சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே மார்க்கண்டேயர் வழிபட்ட கொழையூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கொழையூரில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.   இக்கோயில்திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்  கோயிலில் காலசம்ஹாரம் முடிந்து பரிபூரண ஆயில் பெற்ற மார்க்கண்டேயன் வழிபட்ட 6 முருகன் ஸ்தலங்களும் ஒன்றாகும். இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கி, இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள்  நிறைவடைந்து  பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில்  புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை சுற்றி வந்து கோபுரத்தை வந்தடைந்தது. பின்னர் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீரை ஊற்ற மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !