மேலும் செய்திகள்
அரங்கநாதர் கோவில் தேருக்கு ‘ஷெட்’ இல்லை
446 days ago
ஆரோக்கிய அன்னை தேர்பவனி
446 days ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்தேரோட்டம் நடந்தது.சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலின் ஆனித் திருவிழா ஜூன் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் திருவிழாவாக தினமும் காலை இரவு நேரங்களில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடக்கிறது. ஜூன் 17ம் தேதி கழுவன் விரட்டு திருவிழாவும். ஜூன் 18 ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும் நடந்தது. ஜூன் 19ம் தேதி இரவு 8:00 மணிக்கு மீனாட்சி சொக்கநாதருக்கு திருக்கல்யாணம் நடந்தது. 9 ஆம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாலை 4:30 மணிக்கு பிரியாவிடையுடன் சொக்கநாதர் ஒரு தேரிலும், மீனாட்சியம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேசுவரர் தனித்தனி சிறிய தேர்களிலும் எழுந்தருளினர். 5:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு ரத வீதிகள் வழியாக பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். இரவு 7:15 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பத்தாம் நாளான இன்று தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முறையூர் கிராமத்தார்களும், தேவஸ்தான நிர்வாகமும் செய்து வருகின்றனர்.
446 days ago
446 days ago