கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :557 days ago
சிவகங்கை ; தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் ஆனி தேரோட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் மாம்பழத் திருவிழா எனும் ஆனித்திருவிழா கொடியெற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜூன் 17 ந்தேதி திருக்கல்யாணமும், இன்று 21ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருள சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.