உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி பவுர்ணமி; அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்

ஆனி பவுர்ணமி; அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை ; ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கொளுத்தும் வெயிலை பொறுப்படுத்தாமல் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சிவ தலங்களில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக திருவண்ணாமலையில், மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்ம தரிசனம், கட்டண தரிசனம் மூலமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, கொளுத்தும் வெயிலை பொறுப்படுத்தாமல் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பின் கோயிலில் வழிபட்டு, கிரிவலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !