உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்

சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம்

சிவகங்கை; மானாமதுரை அருகே மேலநெட்டூரில் சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயில் ஆனி பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மேலநெட்டூரில் சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள்  வடம் பிடிக்க தேர் வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !