மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா; திருவிளக்கு பூஜை
ADDED :505 days ago
திருவாடானை; திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் மகாலிங்கமூர்த்தி கோயில் திருவிழா ஜூன் 18 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருவிளக்கு பூஜை நடந்தது. சின்னக்கீரமங்கலம், பெரியகீரமங்கலம், வத்தாபட்டி, திருவள்ளுவர் நகர் போன்ற பல பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது.