பழநி பெரியாவுடையார் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை, அன்னாபிஷேகம்
ADDED :547 days ago
பழநி; பழநி, பெரியாவுடையார் கோயிலில் உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பழநி கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் உலக நலன் வேண்டின அன்னாபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. புனித நீரில் பெரியாவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜை தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கந்த விலாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.