கடலுார் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :609 days ago
கடலுார்; பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. கடலுார் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரமோற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடந்தது. மேலும் இரவு அம்மன் வீதி உலா, மகாபாரதம் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடக்கிறது. நேற்று மாலை அம்மன் திருக்கல்யாணம் உற்சவதகதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. பின் அம்மன், அர்ச்சுனர் திருக்கல்யாணம் உற்சவமும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.