சிதம்பரத்தில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா; ஆத்மநாதர் கோயிலில் அபிஷேக ஆராதனை
கடலூர்; கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பரண சாலை திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமேத ஆத்மநாதர் சன்னதியில், மாணிக்கவாசகர் திருவாசகம் சொல்ல சிவபெருமான் தன் கைப்பட எழுதிய இடத்தில், இன்று மாணிக்கவாசகர் மகா குருபூஜை நடைபெற்றது. காலை 8 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை மாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா நடைபெறுகிறது. இதில் திருவாசக முற்றோதல், சிறப்பு அபிஷேகம் , அன்னம் பாலிப்பு ஆகியவை நடைபெறுகிறது. இதில் சிதம்பரம் சேலம் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகின்ற பக்தர்கள் திருவாசகம் முற்றோதல் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாணிக்கவாசகர் குருவு செய்துவிட்டு அதன் அருகே உள்ள ஆத்மநாதர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ட்ரஸ்ட்டி பசவராஜ் ஏற்பாடு செய்துள்ளார்.