ஜம்பையில் முருகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :535 days ago
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை அடுத்த ஜம்பையில் புதிதாக கட்டப்பட்ட மலையடி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணலூர்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தில் செங்குந்த முதலியார் சமூகத்தினர் மற்றும் கிராம பொது மக்களால் புதிதாக கட்டப்பட்ட மலையடி விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. திருமுறைகள் ஓதி, தமிழால் மந்திரங்கள் ஓதப்பட்டு, காலை 7:30 மணிக்கு விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செங்குந்த முதலியார் சமூகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.