உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் ஆனி திருமஞ்சன விழா; கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு நடத்தலாம்

சிதம்பரம் நடராஜர் ஆனி திருமஞ்சன விழா; கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு நடத்தலாம்

கடலுார் ; சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனகசபை மீது ஏறி வழிபாடு நடத்த தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக அளவில் சிறப்பு பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இருமுறை, தரிசன விழாக்கள் நடப்பது சிறப்பு. அந்த வகையில் ஆனித்திருமஞ்சன தரிசனம் வரும் 12ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு, தரிசன விழாவான 12ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் 6:00 வரையில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு, மகாபிஷேகம் நடக்கிறது. காலை 10:00மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மாலை 3:00 மணியளவில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேதராய் நடராஜர் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சிதரும் ஆனித்திருமஞ்சன தரிசனம் நடக்கிறது. இந்நிலையில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு நடத்த தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !