உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவள்ளி வீரமாத்ரே அம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

வடவள்ளி வீரமாத்ரே அம்மன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு

கோவை; வடவள்ளி கல்பனா நகர் ஸ்ரீ வீர மாத்ரே அம்மன் கோவிலில் 48ம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழாவில் ஸ்ரீ சண்டி ஹோமம் நடந்தது. இந்த நிகழ்வானது காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அடுத்து புண்ணியாக வாசனம். நாந்தி சங்கல்பம் | கலச ஸ்தாபனம், கலச ஆவாஹனம், வேத பாராயணம், ஸ்ரீ சண்டிகா பரமேஸ்வரி மந்திர பாராயணம், நவக்கிரக பரிவார தேவதை ஹோமம், மகா சண்டி ஹோமம் அதைத்தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. நிறைவக பூர்ணாஹதி செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமான பக்தர்கள கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !