விஸ்வேஸ்வரர் கோவிலில் நடராஜர் சிவகாமி அம்மனுடன் அருள்பாலித்த மாணிக்கவாசகர்
ADDED :484 days ago
திருப்பூர், விஸ்வேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழாவில் நடராஜர் சிவகாமி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் அருள்பாலித்தார்.
சைவ சமயக் குரவர் என போற்றப்பட்ட நான்கு பேரில், மாணிக்கவாசகர் ஒருவர். மதுரை திருவாதவூரில் பிறந்த அவர், சிவபெருமானை போற்றி திருவாசகம் பாடினார். கடலுார் அருகேயுள்ள சிதம்பரத்தில் மறைந்தார். சிவபெருமான் கோவில்களில், அவர் மறைந்த ஆனி மாத மகம் நட்சத்திர நாளில், அவருக்கு குருபூஜை வழிபாடு நடத்தப்படும். இன்று அவரின் குருபூஜை விழாவை முன்னிட்டு விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் நடராஜர் சிவகாமி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.