திருச்சி திருமுக்தீஸ்வரர் கோயிலில் 100 ஆண்டுக்குப் பின் மகா கும்பாபிஷேகம்
ADDED :481 days ago
திருச்சி; மணப்பாறை அடுத்த பூர்த்தி கோயில் கிராமத்தில் அந்தாள ஈஸ்வரி உடனுறை திரு முத்தீஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள திருமுக்தீஸ்வரர் சிவலிங்கமாக அருள் பாலிக்கிறார். இக்கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. 100 ஆண்டுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை விட்டு 9ம் தேதி யாக பூஜைகள் நடைபெற்றன. யாக பூஜை நிறைவில் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தான தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகம் நடந்தது. வட்டார மக்கள் திரளாக பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.